புளியம்பட்டியில் ஆடு விற்பனை ஜோர் !

புன்செய்புளியம்பட்டி

 

 தீபாவளியை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டி வாரச்சந்தையில், ஆடுகளின் விற்பனை நேற்று களை கட்டியது. அதிகாலை முதலே மக்கள் குவிய துவங்கினர். 

 

10 கிலோ முதல், 12 கிலோ வரையிலான வெள்ளாடு, 5,300 ரூபாய் முதல், 6500 ரூபாய் வரை விற்பனையானது. ஐந்து முதல், 10 கிலோ செம்மறி ஆடு, 2,500 முதல், 5,500 ரூபாய் வரையும் விலை போனது. அனைத்து ஆடுகளும், 45 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

 

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: ஐப்பசி மாதம் துவங்கி உள்ளதால், சென்ற வாரத்தை விட இந்த வாரம், அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளதால், வெள்ளாடு மற்றும் ஆட்டுக்கிடா, 500 ரூபாய் வரை விலை உயர்ந்தது. இவ்வாறு கூறினார்.


Popular posts
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image
தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
Image
நெல்லை ஆட்சியளர் அதிரடி ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 12 குழுக்கள் அமைப்பு
Image
சென்னை திருவெற்றியூர் பொது வர்த்தகர் சங்கம் சார்பில் பொதுக்குழு
Image
இனிமேல் கவலையே வேண்டாம்- ஓட்டுநர் உரிமம் வாங்குவதில் புதிய நடைமுறை