ம்பம்
தேனி மாவட்டம் கம்பம் முல்லைப்பெரியாறில் இருந்து பதினெட்டாம் கால்வாய் இத்திட்டத்தின் கீழ் பயன் படக்கூடிய விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் அவர்களின் பரிந்துரையின் படி தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் அவர்கள் இன்று முதல் 30 நாட்களுக்கு 98 கன அடி வினாடி வீதம் தண்ணீர் திறந்து வைத்தார் இந்த திட்டத்தின் கீழ் 4614 .25 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் படக்கூடிய கிராமங்கள் உத்தமபாளையம் வட்டம் புதுப்பட்டி , அனுமந்தன்பட்டி ,பண்ணைபுரம், கோம்பை ,தேவாரம், சங்கராபுரம், பொட்டிபுரம், போடிநாயக்கனூர் வட்டம் ,மீனாட்சிபுரம் கோடங்கிபட்டி, ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் மேலும் விவசாயிகள் அனைவரும் அதிக மகசூல் பெறும் நோக்கத்துடன் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் மாறு கேட்டுக் கொண்டனர் இதில் திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் உத்தமபாளையம் வட்டாட்சியர் உதய ராணி, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்