தொழிலதிபர் ரத்தன் டாடா பிரபலத்தன்மைக்காக அல்லாமல் மக்களுக்கு உதவும் நோக்கில் பல உதவிகள் செய்யக்கூடியவர். அந்த குணத்தை வெளிப்படுத்தியுள்ளார் 27 வயதான சாந்தனு நாயுடு.
ரத்தன டாடாவை 2014 ஆம் ஆண்டில் முதல்முறையாக சந்தித்தாகவும் தனது வாழ்க்கையை மாற்றிய சந்திப்பை குறித்து சாந்தனு விளக்குகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாயின் மரணத்தைக் கண்டதாகவும், நாய்கள் வாகனங்களில் அடிபடாமல் இருக்க அதன் காலர்களில் பிரதிபலிக்கும் தன்மை கொண்ட பொருளினை பொருத்த வேண்டும் என்று நினைத்தார். அப்போதுதான் ஓட்டுநகள் நாய்களை தூரத்திலிருந்து அடையாளம் காண முடியும்.
“இந்த வார்த்தைகள் தீ போல பரவியது எங்களின் பணிகள் குறித்து டாடா குழும நிறுவனங்களின் செய்திகளிலும் வெளியானது. அந்த நேரத்தில் என் தந்தை ரத்தன் டாடாவுக்கு கடிதம் எழுதச் சொன்னார். ஏனெனில் அவர் நாய்களை நேசிக்கக் கூடியவர். நான் முதலில் தயங்கினேன், பின் 'என் எழுதக்கூடாது' என்று எண்ணி எழுதினேன்.
கடிதம் எழுதி இரண்டு மாதங்களுக்கு பிறகு டாடாவிடமிருந்து பதில் வந்தது. அவர் ஒரு கூட்டத்திற்கு என்னை அழைத்தார். என்னால் அதை நம்ப முடியவில்லை என்று சாந்தனு தெரிவிக்கிறார்.