முதல் உலகப் போரில் மரணடைந்தவர்களுக்கான நினைவுச் சின்னம் திருச்சியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சம்மந்தமில்லாத நாடுகளுக்கு இடையே நடைபெற்றிருந்தாலும் பிரிட்டிஷ் அரசு நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்பதற்காக நம் நாட்டவர்கள் அவர்களுக்காக சண்டையிட்டு உயிரிழந்தனர்.
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து பலர் பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்திருந்தனர். அதில் குறிப்பாக முதலாம் உலகப் போரில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த, 302 வீரர்கள் போரில் தீரமாக பங்கேற்றனர்.
இவர்களில், 41 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், 1919ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், திருச்சி காந்தி மார்க்கெட் எதிரில் முதலாம் உலக போருக்கான நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. இந்த நினைவுச் சின்னம் திருச்சி போர் வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. படை வீரர்களின் நினைவாக, ஒரு பெரிய கடிகாரமும் பின்னர் அமைக்கப்பட்டது.