காதலனை அடைய சொர்ணாக்காவாக மாறிய மலேசிய பெண்..! முகநூல் மோகம்...

முகநூலில் காதலித்து ஏமாற்றிய தேனி வாலிபரை கடத்தி திருமணம் செய்ய முயன்ற மலேசிய பெண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீவிர விசாரிப்பதே மெய் என்ற பழமொழி எப்போது அந்தக்காலம் நவீன காலமாக மாறியதோ அப்போதே காணாமல் பொய் விட்டது. நிஜம் எது, பொய் எது என தெரியாமல் மெசேஞ்சருக்குள் குடும்பம் நடத்தி வரும் எத்தனையோ பேருக்கு இந்த சம்பவம் மிக பெரிய பாடம்.


தேனி மாவட்டம் காட்டு நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அசோக் குமார். மும்பையில் சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மென் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இவருடைய முகநூலில் மலேசியாவை சேர்ந்த அமுதா என்ற பெண்ணுடன் அறிமுகம் கிடைத்துள்ளது.

சில நாட்களில் நெருங்கி பழகி வந்த இவர்கள் தங்களது புகைப்படங்களை பரிமாறி கொண்டனர். கண்ணை கவர்ந்த அழகு, போதுமென்ற அளவுக்கு சொத்து, பாசம் நிறைத்த பேச்சு என அமுதாவிடம் இருந்த அனைத்தும் அசோக்குமாரை கவர்ந்துள்ளது.

இதனால் காதல் ஆசைகொண்ட அசோக் குமாரின் விருப்பத்தை மலேசியா பெண் அமுதாவும் ஏற்று கொண்டார். இன்டர்நெட்டை காதல் பாலமாக வைத்துக்கொண்ட இருவரும் சிறிது நாட்களுக்கு முன்பு சந்திக்க முடிவு செய்தனர்.

அதனால் தேனிக்கு வந்து உன்னை சந்திப்பதாக அமுதா அசோக் குமாரிடம் கூறினார். அதன் படி அமுதா அசோக் குமாரின் சொந்த ஊரான காட்டு நாயக்கன்பட்டிக்கு வந்தார். காதலியை முதன்முறையாக நேரில் பார்க்க துடித்த அசோக் குமாரும் மும்பையில் இருந்து தேனிக்கு வந்தடைந்தார்.


Popular posts
திருவண்ணாமலை அடுத்து நல்லாம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு பாஷா முன்னால் தலைவர் நிவாரணம் பொருட்கள் வழங்கினார்
Image
தர்மபுரி நான்கு ரோட்டில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம் உயர்கல்வித்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image
எதற்காக இன்னும் காத்திருக்கிறீர்கள் மாண்புமிகு சி.எம் கொதிக்கும் கமல் காரணம் என்ன
Image
நெல்லை ஆட்சியளர் அதிரடி ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 12 குழுக்கள் அமைப்பு
Image