இதனால் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பம் செய்பவர்கள், டிரைவிங் சோதனைகளை பூர்த்தி செய்வதற்காக தெரிந்தவர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆகியோரிடம் சென்று கார்களை கடன் பெற வேண்டிய தர்மசங்கடமான நிலை ஏற்படுகிறது.
இதில் மோசமான நிலை என்னவென்றால், உதவி செய்பவர்கள் காரை தர முடியாது என்று சொல்லிவிட்டால், மேலும் தர்மசங்கடமாகிவிடும். ஓட்டுநர் உரிமம் எடுக்க முடியாமல் போகலாம், மேலும் அவர்களுடைய நட்பை கூட இழக்க நேரிடலாம்.
ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வாடகைக்கு கார்
சொந்தமாக கார் இல்லாதவர்களின் பரிதாப நிலையை புரிந்து கொண்ட டெல்லி போக்குவரத்து துறை, புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, கார் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பம் செய்பவர்கள் டிரைவிங் சோதனைக்கு உட்படுத்தும் போது, ஆர்.டி.ஓ அலுவலத்திலேயே கிடைக்கும் வாடகைக்கு கார்களை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, டெல்லியிலுள்ள சராய் காலே கான் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இந்த திட்டம் சோதனை முயற்சியாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் கார் லைசன்ஸ் பெற விரும்புபவர்கள், இந்த ஆர்.டி.ஓ ஆலுவலகத்திலேயே வாகனங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.